புகை, நெருப்பு, கண் எரிச்சல் எதுவும் இல்லாத இந்த பொங்கலை கொண்டாட விரும்புகிறீர்களா? பொங்கல் வைக்கும் போது கண் எரிச்சல், புகை போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் பொங்கல் குக்கரில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி
வெல்லம்
துருவிய தேங்காய்
நெய்
முந்திரி
ஏலக்காய் பொடி
ஜாதிக்காய்
காய்ந்த திராட்சை
செய்முறை
பொங்கல் செய்வதற்கு பச்சரிசி எடுத்து ஊற வைக்கவும். பின்னர் வெல்லத்தை உடைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் பாசிப்பருப்பை சேர்த்து சிறிது வறுத்து அதில் இந்த அரிசியையும் சேர்த்து வறுத்து தண்ணீர் ஊற்றி கழுவி வேக வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கப்பில் வெல்ல கரைசலை எடுத்துக் கொள்ளவும். அரிசியும் பருப்பும் வெந்து வந்ததும் அதில் சிறிது நெய் ஊற்றி கிளறிவிட்டு அதில் இந்த வெல்ல கரைசலை வடிகட்டி ஊற்றி கிளறவும்.
சக்கரை பொங்கல் குக்கர்ல சுவையா இப்டி செஞ்சுபாருங்க/sakkarai pongal recipe in tamil/Chakkarai Pongal
மேலே துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, சிறிது ஜாதிக்காயை தூளாக்கி குறைவாக சேர்த்து பச்சை கற்பூரமும் சிறிது அதில் சேர்த்து கலக்கவும்.
பின்னர் அதில் முந்திரிப் பருப்பு, திராட்சை இரண்டையும் சேர்த்து வதக்கி பொங்கலில் கொட்டி கிழறினால் சுவையான சர்க்கரை பொங்கல் குக்கரிலையே செய்துவிடலாம்.