மழை மற்றும் குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பலருக்கும் சளி, இருமல் எளிதில் பிடித்து விடும். அப்போதெல்லாம் உடனே மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் வீட்டில் உள்ளவற்றை வைத்தே குணப்படுத்த முயற்சி செய்யலாம். இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும்.
மாறும் காலநிலைகளில் அனைவரையும் அதிகம் தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று சளி, இருமல் ஆகும். அப்படிப்பட்ட சளி, இருமல், ஜலதோசத்தை விரட்ட எளிமையான ஒரு வீட்டு வைத்திய குறிப்பு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெற்றிலை
மிளகுத்தூள்
சோம்பு
தேன்
சுக்கு அல்லது இஞ்சி தூள்
செய்முறை
ஒரு வெற்றிலையை எடுத்து காம்பு உடைத்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். அதன் மேல் உள்ள நீர் வடித்து விட்டு அதில் மிளகுத்தூள் தூவி மேலே சிறிது சோம்பு, சுக்கு அல்லது இஞ்சி தூள் தூவி தேன் விட்டு வெற்றிலையை அப்படியே மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.
சளி பிடித்து இருக்கும் நேரங்களில் இது மாதிரி வெற்றிலையை மென்று சாப்பிட சளி, இருமல், ஜலதோஷம் நீங்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறிது குறைவாக கொடுக்கலாம்.
பல வருஷ சீக்ரெட்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“