மோர் குழம்பு சாப்பிடுங்க… முகப்பரு மறையும், மலச்சிக்கல் நீங்கும்; டாக்டர் மைதிலி
முகப்பரு, கரும்புள்ளி ஏற்படாமல் தடுக்கக்கூடிய முக்கியமான உணவு மோர் குழம்பு. டீன் ஏஜ் பெண்கள் வாரத்திற்கு 2 முறை சாப்பிட வேண்டிய குழம்பு. இதனால், முகப்பரு ஏற்படக்கூடிய வாய்ப்பு மிக குறைவு என்கிறார் மருத்துவர் மைதிலி.
முகப்பரு, கரும்புள்ளி ஏற்படாமல் தடுக்கக்கூடிய முக்கியமான உணவு மோர் குழம்பு. டீன் ஏஜ் பெண்கள் வாரத்திற்கு 2 முறை சாப்பிட வேண்டிய குழம்பு. இதனால், முகப்பரு ஏற்படக்கூடிய வாய்ப்பு மிக குறைவு என்கிறார் மருத்துவர் மைதிலி.
மோர் குழம்பு சாப்பிடுங்க… முகப்பரு மறையும், மலச்சிக்கல் நீங்கும்; டாக்டர் மைதிலி
இந்திய உணவுகளில் வெயில்காலங்களில் இடம்பெறும் முக்கிய பானங்களில் ஒன்று மோர். மோர் இல்லாத கோடைகாலமா? என்கிற அளவுக்கு அனைவருமே பெரும்பாலும் விரும்பக்கூடியது. மோரில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். 245 மி.லிட்டர் மோரில் 8 மி.கி புரதமும், 98 கலோரிகளும், 22% கால்சியமும், 22% வைட்டமின் பி12-ம், 3 மி.கி நார்ச்சத்தும், 16% சோடியமும் நிறைந்திருக்கிறது.
Advertisment
முகப்பரு, கரும்புள்ளி ஏற்படாமல் தடுக்கக்கூடிய முக்கியமான உணவு மோர் குழம்பு. டீன் ஏஜ் பெண்கள் வாரத்திற்கு 2 முறை சாப்பிட வேண்டிய குழம்பு. இதனால், முகப்பரு ஏற்படக்கூடிய வாய்ப்பு மிக குறைவு, சருமத்தை பொலிவாக்கும், மோர் குழம்பு சாப்பிடுவதால், சருமம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறைவு, மலசிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.என்கிறார் மருத்துவர் மைதிலி.
மூட்டு வலி, வீக்கம், குதிகால் வலி பிரச்னை உள்ளவர்கள், வீக்கத்தை சரிசெய்யக்கூடிய தன்மை மோர் குழம்புல அதிகமாக உள்ளது என்கிறார் மருத்துவர் மைதிலி. மைக்ரேன் நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு கம்மி பண்ணிடும். கோடை காலத்தில் கண்டிப்பாக வாரத்துக்கு 2 முறை கண்டிப்பா சாப்பிட வேண்டிய முக்கியமான குழம்பு. மோர் குழம்பில் கால்சியம் ஊட்டச்சத்து அதிகளவில் உள்ளது. ஒரு கரண்டிக்கு மோர் குழம்பில் ஒரு நாளுக்கு தேவையான 27% அதாவது, கிட்டத்தட்ட 155 முதல் 158 மில்லி கால்சியம் ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. எலும்புகள் வலுவடைய செய்கிறது கால்சியம். எலும்பு தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்னைகளை குறைக்கிறது. பற்களை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
மோரில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. மோரில் உள்ள லாக்டோபாகிலஸ் அமிலோபிலஸ் மற்றும் லாக்டோபாகிலஸ் பல்கேரியஸ் உள்ளிட்ட புரோபயாட்டிக்குகள் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்களை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.