நீங்கள் உடல் குறைக்கும் பயணத்தில் முந்திரி சாப்பிட்டால் எடை கூடும் என்ற பொது எண்ணம் இருக்கிறது. ஆனால் உண்மை அப்படியில்லை. உடல் எடை குறைக்கும் பயணத்தில் நட்ஸ்-களுக்கு பங்கு இருக்கிறது. இதில் முந்திரி முக்கிய பங்கு வகிக்கிறது.
முந்திரி சாப்பிடுவதால், வயிறு நிரம்பிவது போல் தோன்றும். இதனால் நாள் முழுவதும், நீங்கள் குறைவாக சாப்பிடுவீர்கள். மேலும் இதில் புரோட்டீன் அதிகமாக இருக்கிறது.
முந்திரியில் அதிக நார்சத்து இருப்பதால், அது ஜீரணத்திற்கு உதவுகிறது. இதனால் நமது உணவில் அதை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதில் நன்மை தரும் கொழுப்பு இருப்பதால் அது மெட்டபாலிசத்திற்கு உதவுகிறது.