scorecardresearch

இந்த 3 காய்கறிகள் ரொம்ப முக்கியம்: கொலஸ்ட்ரால் அதிகரிக்காது

சர்க்கரை நோய்க்கு மட்டும் அல்ல கொலஸ்ட்ராலுக்கும், உணவுக் கட்டுப்பாடு தேவை. ’பெக்டின்’ என்ற கரைக்கூடிய நார்சத்து இருக்கிறது. இது ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் சில காய்கறிகளில் இருக்கிறது. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

புரொக்கோலி

புரொக்கோலியில் கரையக்கூடிய நார்சத்து அதிகம் இருக்கிறது. இதில் சல்பர் அதிகம் உள்ளது. இந்த சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. புரொக்கோலியில் உள்ள நார்சத்து பையில் ( bile) ஆசிட்டுடன் சேர்ந்து கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. உணவு அதிகமாக எடுத்துகொள்ளும் எண்ணத்தை குறைக்கிறது.

காலிபிலவர்

இதில் இருக்கும் ஒருவகை  லிப்பிட், நமது குடல் கொலஸ்ட்ராலை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கிறது. மேலும் இதில் சல்போராபேன் (Sulforaphane) சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும் இது இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.

முள்ளங்கி

முள்ளங்கியில் ஆந்தோசயனன் என்ற சத்து இருக்கிறது இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும் இது நரம்புகளின் வீக்கத்தையும், இதய ரத்த குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது. மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம் இருக்கிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ரத்த கொதிப்பை குறைக்கிறது. மேலும் இதய கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Eat these 3 vegetables to cut your bad cholesterol