Advertisment

பூண்டு கொஞ்சம் வெங்காயம்: இந்த உணவுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால்  காணாம போயிடும் பாஸ்

இந்நிலையில் கொலஸ்ட்ராலுக்கு நாம் சாப்பிடும் மாத்திரைகளுடன் சில உணவு முறைகளில் மாற்றத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் . இந்நிலையில் சில உணவுகளை நாம் சில உணவுகளோடு சேர்த்து சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.

author-image
WebDesk
New Update
இந்த உணவுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் காணாம போயிடும் பாஸ்

இந்த உணவுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் காணாம போயிடும் பாஸ்

கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது கடினமான விஷயம். இந்நிலையில் கொலஸ்ட்ராலுக்கு நாம் சாப்பிடும் மாத்திரைகளுடன் சில உணவு முறைகளில் மாற்றத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் . இந்நிலையில் சில உணவுகளை நாம் சில உணவுகளோடு சேர்த்து சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.

Advertisment

பூண்டும் மற்றும் வெங்காயம் கொலஸ்ட்ராலை  குறைக்க உதவுகிறது. பூண்டில் அலிசின் இருக்கிறது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. வெங்காயத்தில் க்யூயரிசெட்டின் உள்ளது, இந்த சத்து  எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவால் உடல் பாதிக்கப்படாமல் இருக்க உதவுகிறது. இந்நிலையில் இதை நாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடலாம்.

பாதாம் மற்றும் தயிர் இதுவும் ஒரு சூப்பரான காம்போ. பாதாமில் மோனோ சாச்சுரேடட் கொழுப்பு சத்து இருக்கிறது. இவை எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இந்நிலையில் தயிர் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயம் 4 % குறைவதாக, ஆய்வு ஒன்று கூறுகிறது. இதில் இருக்கும் புரோபயாடிக்ஸ் உங்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இவை வீக்கத்தை குறைக்கிறது.

பருப்பு மற்றும் பிரவுன் ரைஸ், இதில் நார்சத்து மற்றும் புரத சத்து இருக்கிறது. இது எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. பிரவுன் ரைஸ் இதில் இருக்கும் நார்சத்து மற்றும் வைட்டமின்ஸ்  இதய நோய் ஏற்படாமல் 20 % பார்த்துகொள்கிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment