பப்பாளி முக்கியமான பழ வகைகளில் ஒன்றாகும். பப்பாளிப் பழத்தில் வைட்டமின் “ஏ” நிறைந்துள்ளது. தினமும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும். கண்பார்வை தெளிவடையும். மாலைக் கண் நோய் குணமாகும். மலம் கழிப்பது எளிதாகும். இரத்தமும் சுத்தமாகும். பப்பாளியில் மேலும் சில பயன்களும் உள்ளன.
அதுமட்டுமின்றி பப்பாளியில் உள்ள ஒரு முக்கியமான சத்து பற்றி சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
இதய ஆரோக்கியம்: பப்பாளியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். உகந்த இரத்த அழுத்த அளவை பராமரிக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். மேலும் இதயத்தில் ரத்தக் கொழுப்பு படிவதை தடுக்கும்.
புற்றுநோய்: பப்பாளியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உட்பட, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் ஒரு சில வகையான புற்றுநோய்களின் வாய்ப்பைக் குறைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பப்பாளியின் நன்மைகள்! Dr. Sivaraman speech in Tamil | Benefits of Papaya in Tamil | Tamil speech box
செரிமானம்: பப்பாளியில் பப்பேன் என்சைம் இருப்பதால் செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கல், வயிற்று உபாதைகள், வயிற்று வலி மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளை போக்கும்.
கண்: பப்பாளியில் உள்ள கரோட்டினாய்டுகள் வயது மூப்பு காரணமாக வரும் கண்புரை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும். கண்பார்வையை தெளிவாக்கும்.
மாதவிடாய்: சினைப்பை நீர்க்கட்டிகளை சரியாக்கும். சரியான நேரத்தில் மாதவிடாய் சுழற்சிக்கு உதவும். கருப்பை வலுவடையும், சினைப்பையை சீராக்கும்.
மேலும் சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பப்பாளி பழம் சாப்பிட கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினசரி ஒரு சிறிய துண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.