குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அரிசிக்கு மாற்றாக கோதுமையை எடுத்துகொள்வார்கள். ஆனால் சமீப நாட்களில் கோதுமையில் அதிக கலோரிகள் இப்பதாகவும். அதில் அதிக கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால் மாற்றாக என்ன சாப்பிட வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
இதற்கு சிறந்த மாற்றாக ராகி மற்றும் கம்பு ஆகியவைதான். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
இந்நிலையில் வாழ்வியல் மாற்றங்களில் முக்கியமானவை, உணவுகளில் நாம் செய்யும் மாற்றம்தான். இதில் அதிக கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். மேலும் கூடுதலாக புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கம்பு வகைகளில் அதிக நார்சத்து இருக்கிறது. இதுபோலவே ராகியையும் சாப்பிடலாம். கூடுதலாக மல்டி கிரைன் ஓட்ஸ்யும் சாப்பிடுங்கள். மல்டிகிரைன் ஓட்ஸ் சாப்பிடலாம். மேலும் காலை உணவுகளை தவிர்க்காமல் இருப்பது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.