நள்ளிரவில் நாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால், அது ஜீரணக்கும் முறையை மட்டும் பாதிக்காது. பசியெடுக்க காரணமாக இருக்கும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை பாதிக்கும். இதனால் கூடுதல் பசி எடுக்கும் மேலும் உடல் எடை அதிகரிக்கும்.
நமது உடலில் பசி எடுக்கும், அல்லது பசியை தூண்டும் ஹார்மோன் கெரிலின் , (Ghrelin) . இந்நிலையில் சாப்பிட்டு முடித்த பின்பு இது போதும் என்றும் அல்லது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன் லெப்டின் ( leptin). இந்நிலையில் நாம் நள்ளிரவில் அதிக கலோரிகளை கொண்ட உணவை சாப்பிட்டால், பசியை தூண்டும் ஹார்மோனான கெரிலின் அளவை அதிகரிக்கும். குறிப்பாக சாப்பிட்டபின்பு ஒது போதும் என்பதை உறுதி செய்ய உதவும் ஹார்மோன் லெப்டின், இதன் அளவை குறைக்கும்.
இதனால் பசி எடுத்துக்கொண்டே இருக்கும், ஆனால் நமது உடலின் தேவைக்கு அதிகமாக கூடுதல் உணவை எடுத்துக்கொள்வோம்.
நள்ளிரவில் உண்வு சாப்பிட்டால், பசி தொடர்பான ஹார்மோன்களின் சம நிலையை பாதிக்கும். இதனால் அதிக பசி எடுத்து, நிறைய சாப்பிட்டு உடல் பருமனாக இருக்கும்.
இயற்கையாகவே நமது உடல் உணவை ஜீரணிக்கும் வழிமுறையை பின்பற்றும். இந்த பழக்கம் இந்த வழிமுறையை பாதிக்கும். இரவில் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதால், இரவில் சாப்பிட்டால் அஜீரணம், கேஸ் ஏரிவருவது, சரியாக தூக்கம் வராது.
இந்நிலையில் நள்ளிரவில் சாப்பிட்டால், அந்த உணவு ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் நமது தூக்கம் பாதிக்கப்படும். மேலும் ஆழமான தூக்கத்திற்கு செல்ல நேரம் எடுக்கும், மேலும் தூக்கத்தில் சிறிது இடையூறு ஏற்படும்.
தொடர்ந்து நள்ளிரவில் சாப்பிட்டால், இதய ரத்தகுழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
நள்ளிரவில் சாப்பிடுவதை தவிர்த்தால், நமது ஜீரண மண்டலத்தில் சுரக்கும் என்சைம் அளவை சீராக வைத்திருக்கும். உடல் தேவையான சத்துக்களை உள்வாங்கிக்கொள்ள உதவும்.
வயிறு உப்புதல், அஜீரணத்தை தடுக்கும். நேரத்திற்கு சாப்பிட்டால், நாள் முழுவதும் சீரான சக்தி கிடைக்கும். சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். அதிக பசி எடுத்து உடல் எடை அதிகரிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“