எல்லா டிபனுக்கு ஏற்ற தரமான சைடிஷ்... காரசாரமான முட்டை கிரேவி: ஈஸி டிப்ஸ்!

எல்லா வகையான டிபனுக்கும் ஏற்ற தரமான காரசாரமான முட்டை கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

எல்லா வகையான டிபனுக்கும் ஏற்ற தரமான காரசாரமான முட்டை கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
muttai gravy

முட்டை கிரேவி

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிலருக்கு முட்டை என்றாலே பிடிக்காது. உயரிய புரதம் வைட்டமின் பி 12, வைட்டமின் டி, செலினியம் மற்றும் கோலின் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் முட்டைகள் நிரம்பியுள்ளன. 

Advertisment

அவ்வளவு சத்து நிறைந்த முட்டையை சாப்பிட பிடிக்காதவர்கள் கூட ஒரு முறை முட்டை கிரேவி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

முட்டை
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
எண்ணெய்
பெரிய வெங்காயம்
கருவேப்பிலை
இஞ்சி பூண்டு பேஸ்ட்
பச்சை மிளகாய்
புதினா
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
சீரகத்துள் சேர்த்து
தக்காளி தொக்கு
தேங்காய் பால் 
கரம் மசாலா 

Advertisment
Advertisements

செய்முறை

தேவையான அளவு முட்டையை வேகவைத்து தோல் உறித்து இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு அனைத்தையும் எண்ணெயில் கலந்து விடவும். பின்னர் மசாலாவில் முட்டையை ரோஸ்ட் செய்ய வேண்டும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வறுத்து எடுக்கவும்.

பின்னர் அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெயை சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கி விடவும். அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதங்கி வந்ததும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.

பச்சை வாசம் நீங்கியதும் அதில் கீறிய பச்சை மிளகாய், புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து மசாலா வாசம் நீங்கும் வரை வதக்கவும். 

முட்டை கிரேவி சுவையா ஈஸியா இப்டி செய்ங்க/egg gravy recipe in tamil/muttai kulambu tamil/egg masala

பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி தொக்கையும் சேர்த்து வேகவைத்து அதில் சிறு தண்ணீர் விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் சிறிது தேங்காய் பால் சேர்த்து வேகவிட்டு அதில் சிறிது கரம் மசாலா சேர்த்து கலந்து விடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Egg Benefits of eating eggs for breakfast

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: