தினமும் வெறும் பத்து ரூபாய் செலவு பண்ணி இந்த ஒரு உணவு பொருளை வாங்கி சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று டாக்டர் பொற்கொடி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
தினமும் காலை உணவுக்காக இரண்டு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டையில் அதிக புரோட்டின்ஸ் இருப்பதால் நம் உடல் தசை சரி செய்யவும் நம் மொத்த உடலையும் பாதுகாக்க உதவும்.
முட்டையில் விட்டமின் ஏ, மினரல்ஸ், விட்டமின் டி, பி 12, ஜிங்க், அயன், போலட் போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் கண்களில் பிரச்சனை வராமல் பாதுகாக்கும். முட்டையில் கோலின் அதிகமாக உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவும். அதுமட்டுமின்றி தோள் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும் என்கிறார் மருத்துவர்.
முட்டைகளை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பல நன்மைகள் கிடைக்கும். இதில் அதிக இரும்புச்சத்து உள்ளது. பல்வேறு புரதச்சத்துக்கள் முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகம் உள்ளது. கொலைன் சத்து முட்டையில் உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
Advertisment
Advertisements
முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
1.முட்டை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
2.உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
3. மூளை திறனை மேம்படுத்த உதவும்
4. முட்டை சாப்பிடுவதால் கண்களுக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன் கண்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
5.காலையில் முட்டை சாப்பிடுவது, நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.