மிகவும் விரைவில் அதும், 10 நிமிடங்களில் செய்யும் முட்டை ரெசிபி எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், சீரக தூள் – 1/2 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், முட்டை - 8
செய்முறை:
முதலில் 8 முட்டைகளை எடுத்து நன்றாக கழுவி கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி இந்த முட்டைகளை போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். முட்டையை வேக வைக்கும் தண்ணீரில் எண்ணெய் விட்டு வேக வைத்தால் முட்டை நன்றாக வெந்து கிடைக்கும். முட்டைகள் நன்றாக ஆறிய பின்பு தோல் உரித்துக் கொள்ளுங்கள். தோல் உரித்த முட்டையில் கத்தியை வைத்து ஆங்காங்கே கீரிக் கொள்ள வேண்டும். மசாலா உள்ளே இறங்குவதற்காக. ஆனால் முட்டை முழுசாக தான் இருக்க வேண்டும். உடைய கூடாது. வேகவைத்த இந்த முட்டைகள் அப்படியே இருக்கட்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மேற் குறிப்பிட்ட மசாலா தூள்கள் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்க வேண்டும். வேக வைத்திருக்கும் முட்டைகளை இந்த மசாலாவில் சேர்த்து நன்றாக கலந்து சூடு செய்து மேலே இரண்டு மூன்று கொத்தமல்லி தழைகளை தூவி அப்படியே பரிமாறினால் சூப்பரான முட்டை மசாலா தயார்.