உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட விரும்புவோம். இப்போது, குளிர்காலம் என்பதால் சூடாக ஏதாவது சாப்பிட விரும்புவோம். குழந்தைகளும் பள்ளி முடிந்து வந்து சூடாக ஏதாவது செய்து தர கேட்பார்கள். சேமியாவில் முட்டை சேர்த்து உப்புமா செய்யுங்கள். முட்டை சேமியா உப்புமா ரெசிபி குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 2
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பச்சை பட்டாணி – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
சேமியா – 2 கப்
முட்டை – 2
தேவையான காய்கறிகள் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், தேவையான காய்கறிகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, மசாலா பொடிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வேக விடவும். பின்னர் அதில் நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். இப்போது சேமியாவை சேர்த்து கிளறிவும். கடைசியாக முட்டைகளை உடைத்து ஊற்றி தட்டம் கொண்டு மூடி வைக்கவும். பின் ஒரு முறை நன்கு கிளறி இறக்கினால், முட்டை சேமியா உப்புமா தயார். சூடாக பரிமாறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil