சூப் என்றாலே காரசாரமாக, சுவை நிறைந்ததாக இருக்கும். சூப் உடல் நலத்திற்கு நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் குடிக்கலாம். காய்கறிகள் சூப், சிக்கன், மட்டன் சூப் எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக ஹோட்டல் கடைகளுக்கு சென்றால் முதலில் சூப் வேண்டுமா? என்று தான் கேட்பார்கள். வீட்டிலேயே சூப் செய்து குடிப்பது நல்லது. அந்தவகையில் முட்டை சூப் எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை சூப் தயாரிக்க முதலில் சிக்கன் சாறு தயாரிக்க வேண்டும்.
சிக்கன் சாறு தயாரிக்க
சிக்கன் – 250 கிராம்
பூண்டு – 4
வெங்காயம் – 1 நறுக்கியது
கேரட் – 2 நறுக்கியது
செலரி – 2 நறுக்கியது
பிரியாணி இலை – 1
முழு மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
சூப் செய்ய
இஞ்சி பொடியாக நறுக்கியது – சிறிதளவு
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
முட்டை – 4
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சிக்கன் துண்டுகள், பூண்டு பற்கள், கேரட், பெரிய வெங்காயம், செலரி, பிரியாணி இலை, உப்பு, முழு மிளகு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
கொதிக்கவுடவும். சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். இப்போது வெந்த சிக்கன் மற்றும் காய்கறிகளை வெளியே எடுத்து அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில், இஞ்சி, சோயா சாஸ் சேர்த்து கலக்கவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும். மீண்டும் சிக்கன் கலவையை அடுப்பில் வைத்து அடித்து வைத்துள்ள முட்டையை சிக்கன் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கவும். முட்டையை ஊற்றும் பொழுது ஒரு கரண்டியால் கிளறிக்கொண்டே ஊற்றினால் முட்டை நூல் போல் இருக்கும். உப்பு தேவை என்றால் சேர்த்து, மிளகு தூள் சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான் கம கம முட்டை சூப் தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/