சாதம், சப்பாத்திக்கு சூப்பர் சைடிஷ்… டேஸ்டியான முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க!

இரவு உணவுக்கு ஏற்ற சுவையான முட்டை கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம். சாதத்திற்கு கூட இது ஏற்றதாக இருக்கும்.

இரவு உணவுக்கு ஏற்ற சுவையான முட்டை கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம். சாதத்திற்கு கூட இது ஏற்றதாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
egg thokku

இரவு சப்பாத்திக்கு ஏற்ற சுவையான முட்டை கிரேவி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

முட்டை 
எண்ணெய்  
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
சீரகம்
வெங்காயம் 
பச்சை மிளகாய்  
மிளகுத்தூள் 
இஞ்சி பூண்டு பேஸ்ட்  
தக்காளி  
மஞ்சள்தூள்  
காஷ்மீரி மிளகாய்தூள்  
கொத்தமல்லித்தூள்  
உப்பு  
கறிவேப்பிலை  
கரம் மசாலா  
கொத்தமல்லி  

செய்முறை:

Advertisment
Advertisements

ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து நறுமணம் வரும் வரை வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிளகுத்தூள், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறவும். தக்காளி ப்யூரி சேர்த்து கிளறி, பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து மொத்தமாக கலந்து விடவும்.

மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்தூள், கொத்தமல்லித்தூள், உப்பு சேர்த்து, கறிவேப்பிலையுடன் கலந்து விடவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும். வேகவைத்த முட்டைகளில் சிறிய கீறல் போட்டு, கறியுடன் நன்கு புரட்டி 5 நிமிடம் சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

கடைசியாக, கரம் மசாலா தூவி, கொத்தமல்லி தூவி இறக்கினால் சூடாக பரிமாறவும். இது சாதத்திற்கும், சப்பாத்திக்கும் ஏற்ற கிரேவி. 

Cooking Tips Egg

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: