scorecardresearch

முட்டை அதிகம் சாப்பிட்டா இந்த பிரச்னை… உஷார் மக்களே!

முட்டையில் அதிகளவில் ஊட்டசத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. நமது உடலின் திரவத்தை சமன்செய்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான எனர்ஜியையும் வழங்குகிறது.

முட்டை அதிகம் சாப்பிட்டா இந்த பிரச்னை… உஷார் மக்களே!

முட்டையில் அதிகளவில் ஊட்டசத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. நமது உடலின் திரவத்தை சமன்செய்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான எனர்ஜியையும் வழங்குகிறது.  முட்டை சாப்பிடுவது நல்லது என்றாலும் கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவது உடலில் வெப்பத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது, இதன் காரணமாக செரிமான கோளாறு ஏற்படும். எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது, அதேபோல முட்டைகளையும் அளவோடு சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 1-2 நன்கு வேகவைத்த முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். முட்டையில் எலும்புகளை உறுதிப்படுத்தும் வைட்டமின் ஏ,டி உள்ளது, மேலும் இதில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு தேவையான இரும்புசத்துக்களும் உள்ளது.

முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது, முட்டை சாப்பிடுவது வயதாகும் போது கண்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவுகிறது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிக அளவு லுடீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது கண்புரை மற்றும் கண்களில் மாகுலர் சிதைவு போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. முட்டையில் நிரம்பியிருக்கும் வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது, தினமும் முட்டை சாப்பிடும்போது உங்களுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்பட்டு பணியுணர்வு கட்டுப்படும். இதனால் தேவையில்லாமல் சாப்பிட்டு உடல் எடை அதிகரிப்பதும் கட்டுப்படுகிறது, முட்டை சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம் தூண்டப்படுகிறது.

முட்டையிலுள்ள

ஒமேகா -3  பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நமது உடலின் செல் சவ்வை உறுதிப்படுத்த உதவுகிறது. ஒமேகா 3-கள் அறிவாற்றல் குறைபாடு, டிமென்ஷியா மற்றும் நல்ல மன ஆரோக்கியம் போன்றவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டையில் அதிகளவு நன்மை கிடைக்கிறது என்பதற்காக அதனை அதிகளவில் உட்கொள்ளல் கூடாது, அதிலும் குறிப்பாக கோடைகாலத்தில் முட்டையை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அது அஜீர கோளாறு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

தகவல் உதவி: மருத்துவர் முத்துக்குமார், தொடர்புக்கு : 9344186480

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Egg to much is problem doctors opinion