கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
எனவே அவர்களுக்கு பிடித்த மாதிரி மைதா, முட்டை, ஓவன் இல்லாமல் ஒரு கேக் எப்படி செய்வது என்று டீ கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
பால் - அரை லிட்டர் நெய் - அரை கப் ரவை - முக்கால் கப் சர்க்கரை - 200 கிராம் முந்திரிப்பருப்பு - 5 பிஸ்தா பருப்பு - 5 பாதாம் பருப்பு - 5
செய்முறை
கேக், ஸ்வீட்ஸ் போன்றவற்றை கடைகளில் சென்று வாங்குவதை விட வீடுகளில் செய்து கொடுப்பது பிள்ளைகளுக்கு சத்தாகவும் இருக்கும் அவர்களுக்கு பிடித்த நேரத்திலும் செய்து கொடுக்கலாம். அப்படியாக மைதா, முட்டை, ஓவன் இல்லாமல் ஒரு ரவை பால் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் பால் சூடாக்கி கொள்ளவும். பால் நன்கு கொதித்து வந்ததும் அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நெய் போட்டு அது சூடானதும் ரவை சேர்த்து வறுக்கவும். கருகவிடாமல் ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் ரவை மற்றும் சூடான பாலை சேர்த்து கிழறி விட்டு ரவையை ஊறவிடவும். பின்னர் கடாயில் நெய் ஊற்றி சர்க்கரையை சேர்த்து கரைத்து விடவும்.
சர்க்கரை கரைந்து தண்ணீர் மாதிரி வந்ததும் அதில் கலந்து வைத்துள்ள ரவை மற்றும் பாலை சேர்த்து கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கட்டி இல்லாமல் கிளறி விடும் போது பாத்திரத்தில் ஒட்டாமல் ஒன்றாக திரண்டு வரும்.
அப்போது ஒரு தட்டில் சிறிது நெய் அல்லது பட்டர் பேப்பரை போட்டு அதன் மேல் நட்ஸ்களை சீவி போட்டு மேலே இந்த பால் கேக்கையும் சேர்த்து ஆறவிட்டு நறுக்கி எடுத்தால் சுவையான ரவா பால் கேக் ரெடியாகிவிடும்.