கொளுத்தும் வெயிலுக்கு குளு குளு பாயாசம்... இளநீர் வச்சு இப்படி செய்து குடிங்க: செஃப் தீனா டிப்ஸ்
இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற வகையில் குளிர்ச்சி தரக் கூடிய இளநீர் பாயாசம் எவ்வாறு செய்யலாம் என்று இந்தப் பதிவில் காணலாம். இதற்கான ரெசிபியை சமையற் கலைஞர் தீனா குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற வகையில் குளிர்ச்சி தரக் கூடிய இளநீர் பாயாசம் எவ்வாறு செய்யலாம் என்று இந்தப் பதிவில் காணலாம். இதற்கான ரெசிபியை சமையற் கலைஞர் தீனா குறிப்பிட்டுள்ளார்.
கோடை காலம் என்றாலே குளிர்ச்சியான பானங்கள் அருந்த வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். அந்த வகையில் சுவையான இளநீர் பாயாசம் எப்படி செய்வது என்று சமையற் கலைஞர் தீனா தெரிவித்துள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
தேங்காய், தண்ணீர், இளநீர், மில்கி மெய்ட் மற்றும் ஏலக்காய் தூள்
செய்முறை:
Advertisment
Advertisements
தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இவ்வாறு அரைத்த தேங்காயில் இருந்து பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது, மூன்று இளநீரில் இருந்து தண்ணீரை மட்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இனி, இரண்டு இளநீரில் இருக்கும் வழுக்கையை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். இதையடுத்து, மூன்று கிளாஸ் தண்ணீர், தேங்காய் வழுக்கை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதற்கு மேல் மில்கி மெய்டை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இதன் பின்னர், அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து, தேங்காய் பாலை இந்தக் கலவையுடன் சேர்த்து ஊற்ற வேண்டும். இனி, துருவி வைத்திருக்கும் தேங்காய் வழுக்கையை இதில் சேர்த்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான இளநீர் பாயாசம் தயாராகி விடும்.