இந்த பாயாசம் செய்ய குக் பண்ண வேண்டிய அவசியம் இல்லை... 5 நிமிசம் போதும்: செஃப் வெங்கடேஷ் பட் டிப்ஸ்
மிகவும் பிரபலமான இளநீர் பாயாசம் எப்படி செய்வது என சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குக் செய்யாமல் இதனை மிக எளிமையாக 5 நிமிடங்களில் செய்து முடித்து விடலாம்.
மிகவும் பிரபலமான இளநீர் பாயாசம் எப்படி செய்வது என சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குக் செய்யாமல் இதனை மிக எளிமையாக 5 நிமிடங்களில் செய்து முடித்து விடலாம்.
அதிக நேரம் கிச்சனில் செலவிட்டு அதிக மெனக்கெடலுடன் செய்யும் உணவுகளை விட, சில நேரத்தில் சிம்பிளாக செய்யும் உணவுகள் மிகவும் ருசியாக இருக்கும். மேலும், இவை பிரபலம் அடையவும் வாய்ப்பு இருக்கிறது.
Advertisment
அந்த வகையில், விரைவாக செய்ய வேண்டும் என்ற நிலையில் பிரபல நட்சத்திர உணவகத்தில் உருவாக்கப்பட்டது தான் இளநீர் பாயாசம் என்று சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குக் செய்யாமல் இதனை தயாரிக்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இளநீர், பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, தேங்காய் துருவல், தேங்காய் வழுக்கை மற்றும் கண்டன்ஸ்ட் மில்க்
Advertisment
Advertisements
செய்முறை:
பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா ஆகிய அனைத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு இளநீர் மற்றும் தேங்காய் பால் ஊற்ற வேண்டும்.
இத்துடன் சிறிது கண்டன்ஸ்ட் மில்க், தேங்காய் துருவல் மற்றும் தேங்காய் வழுக்கை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இறுதியாக, இதன் மீது வெட்டி வைத்திருந்த பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா பருப்புகளை சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான இளநீர் பாயாசம் தயாராகி விடும்.
இதனை வயது பேதமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இளநீர் பாயாசத்தை 5 நிமிடங்களில் செய்து முடித்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பு.