காலையில் வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க்... நாள் முழுக்க புத்துணர்ச்சி: நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ், தான் தினசரி எடுத்துக் கொள்ளும் புத்துணர்ச்சி பானம் குறித்து தெரிவித்துள்ளார். அதனை எவ்வாறு தயாரிக்கலாம் என்று தற்போது பார்க்கலாம்.
சினிமா பிரபலங்களை பார்க்கும் போது அவர்கள் எப்போதும் பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதை போன்று காட்சியளிப்பார்கள். இதற்காக மேக்-அப் போட்டுக் கொண்டாலும், இயற்கையான முறையில் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே புத்துணர்ச்சி சாத்தியப்படும்.
Advertisment
மேலும், ஃபேஸ் க்ரீம், ஃபேஸ்பேக், சீரம், டோனர் போன்ற எத்தனையோ சாதனங்களை வெளிப்புறமாக பயன்படுத்தினாலும், நாம் அன்றாட உணவாக எவ்வளவு சாப்பிடுகிறோம், என்ன பொருட்களை சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.
அதனடிப்படையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் ஒரு ஜூஸ் குறித்து தெரிவித்துள்ளார். இந்த ஜூஸை, நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்கள் கொண்டு தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்களை முதலில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
பாலக் கீரை, செலரி, எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய், பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர்.
செய்முறை:
முதலில் பாலக் கீரையை சுடுதண்ணீரில் லேசாக ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு இத்துடன் செலரி, சிறிதளவு எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் துண்டுகள், புதினா, 2 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
இப்படி செய்தால் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்தான பானம் ரெடியாகி விடும். இதில் அன்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏராளமாக இருக்கின்றன. இதனை தினமும் காலை நேரத்தில் வெறும் குடிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களும் மிகச் சாதாரணமாக கிடைக்கக் கூடிய உணவு வகைகளில் இருந்து தங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றை தயாரித்துக் கொள்கின்றனர். அந்த வகையில் சாமானியர்களும் தங்கள் உணவு முறையில் அக்கறை எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி - Behindwoods TV மற்றும் Mrs Home Food Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.