உடலை புத்துணர்ச்சியாக வைக்க தினமும் காலையில் குடிக்க வேண்டிய எலுமிச்சை கொத்தமல்லி சூப் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த ஜூஸ் காலையில் குடிக்கும் போது புத்துணர்ச்சி்யாக இருக்கும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்பு வெங்காயத்தாள் வெங்காயம், கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதகவும்.
பிறகு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும். பின்பு எலுமிச்சைச்சாறு ஊற்றி பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு 3 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். எலுமிச்சை கொத்தமல்லி சூப் தயார்.