நாம் வீட்டில் சமைக்கு எண்ணெய்யை தேர்வு செய்வது எளிதான விஷயமில்லை. இருந்தாலும் நமது உடலில் முக்கியத் தாக்கத்தை நாம் எடுத்துகொள்ளும் எண்ணெய்யில் இருப்பதால், இதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் வெவ்வேறு வகையான உணவுகளை நாம் வெவ்வேறு வெப்ப நிலையில் சமைப்போம். இந்நிலையில் வெவ்வேறு வெப்ப நிலைக்கு ஏற்றவாறு நாம் எண்ணெய்யை மாற்றி பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அதிக சூடுபடுத்தும்போது, நச்சுத்தன்மை வெளிப்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் எண்ணெய்யில் மோனோசாச்சுரேடட், சாச்சுரேடட் பேட்டி ஆசிட் இருக்கிறது. இந்நியில் நல்ல மோனோசச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ள எண்ணெய்யை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக செக்கில் ஆட்டிய எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது. இதில் எந்தவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படாது. மேலும் இதன் மீது கூடுதல் வெப்பம் பயன்படுத்துவதில்லை. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில், சுத்திகரிக்கவே கெமிக்கல்ஸ் பயன்படுத்தப்படும். எண்ணெய்யின் மணத்திற்காக தனியாக கெம்மிக்கல் சேர்க்கப்படும். இதனால் செக்கு எண்ணெய் சிறந்த தேர்வு
வெயில் காலத்தில் ரைஸ் பிரான் எண்ணெய், ஆலிவ் ஆயில், அவகடோ எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். குளிர் காலத்தில் நல்லெண்ணை, கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் பயன்படுத்தலாம்.
இந்நிலையில் 60 முதல் 90 டிகிரி செல்ஷியஸ், சமைத்தால், அது குறைந்த வெப்ப நிலை. 90 முதல் 190 டிகிரி செல்சியஸ் சமைத்தால் அது மிதமான வெப்ப நிலை. 200 டிகிரி செல்ஷியஸ் அல்லது 300 டிகிரி செல்ஷியஸ்-க்கு அதிகமாக சமைத்தால் அது அதிக வெப்ப நிலை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“