ராகி மாவில் சூப்பரான வாழை இலைக் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஈவ்னிங் பள்ளி முடித்து கலைத்து வரும் பிள்ளைகளுக்கு தெம்பாகவும் டேஸ்டியாகவும் இருக்கும் இந்த கொழுக்கட்டையை எப்படி செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 2 கப் (300 கிராம்) உப்பு - 2 சிட்டிகை தண்ணீர் - 300 மில்லி (சுடுநீர்) பொறிகடலை - 1/2 கப் (100 கிராம்) ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் - 2 கப் (ஒரு பெரிய தேங்காய்) நாட்டு சர்க்கரை - 1 கப் (200 கிராம்) வாழை இலை நல்லெண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு வட்டமான பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 300 மில்லி சுடுநீர் கொஞ்சம்கொஞ்சமாகச் சேர்த்து, கரண்டி அல்லது ஸ்பூன் கொண்டு மாவை நன்கு கிளறவும். கை பொறுக்கும் சூடு வந்ததும், கையால் மாவை மிருதுவாகப் பிசையவும்.
மாவு விரல் வைத்தால் பதியும் பதத்தில் இருக்க வேண்டும். மாவு காய்ந்து விடாமல் இருக்க, ஒரு துணியால் மூடி அல்லது தட்டு போட்டு 10 நிமிடம் ஊற விடவும். ஒரு மிக்ஸி ஜாரில் பொறிகடலை மற்றும் 2 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு பொடி செய்யவும்.
இதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், மற்றும் நாட்டு சர்க்கரை (அல்லது வெல்லம்) சேர்த்து, மிக்ஸியில் விட்டு விட்டு அடித்து நன்கு கலக்கவும். தேங்காயில் உள்ள ஈரம் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்ந்து பூரணம் கெட்டியாகிவிடும். இதை ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இளம் வாழை இலைகளை எடுத்து, கொழுக்கட்டை மடிக்க வசதியாக சின்ன துண்டுகளாகக் கிழித்துக் கொள்ளவும். வாழை இலையின் மேல் லேசாக நல்லெண்ணெய் தடவவும். கைகளிலும் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
ஊறிய ராகி மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்து, வாழையின் மையத்தில் வைத்து, விரல்களால் மெதுவாக வட்டமாகத் தட்டவும். மாவு மிகவும் திக்காகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இல்லாமல் இருக்க வேண்டும்.
தட்டிய மாவின் நடுவில், ஒரு ஸ்பூன் பூரணம் வைத்து, நீளவாக்கில் பரப்பவும். வாழை இலையின் ஒரு மூலையைப் பிடித்து, மாவை மடித்து, அப்படியே உருட்டவும். வாழை இலையிலேயே சுருட்டி ஒரு தட்டில் தனியாக அடுக்கி வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து ஆவி வந்ததும், கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் அடுக்கி வைக்கவும். மூடி போட்டு சுமார் 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
15 நிமிடங்கள் ஆனதும், அடுப்பை அணைத்து, கொழுக்கட்டைகளை வெளியே எடுத்து ஆற விடவும். ராகி மாவு வெந்து, பூரணத்துடன் சேர்ந்து சுவையான வாழை இலை கொழுக்கட்டை தயாராகி இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான பாரம்பரிய ஸ்நாக்ஸ் ஆகும்.