மீதமான மீன் வறுவலைப் பயன்படுத்தி சுவையான மற்றும் சத்தான மீன் சேமியா எப்படி செய்வது என்று சாய்மணிவிவேக் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த ரெசிபி குக் வித் கோமாளியில் கூட செய்து காட்டியிருப்பார்கள். இதை ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக கூட சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு விழுது
தக்காளி
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
முட்டை (2)
இடியாப்பம்
மீதமான மீன் வறுவல்
மல்லி இலை
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் மல்லித்தூள் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும். இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, பொடிமாஸ் போல நன்கு கிளறிக்கொள்ளவும்.
உடைத்துவிட்ட இடியாப்பம் மற்றும் மீதமான மீன் வறுவலை சேர்த்து, மசாலா அனைத்து இடங்களிலும் பரவும் வரை நன்கு கிளறவும். கடைசியாக, நறுக்கிய மல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கினால், சுவையான மீன் சேமியா தயார்.
இந்த ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து, அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மீன் பிடிக்காது என்பவர்கள் கூட இதை சாப்பிடுவார்கள்.