வெறும் 10 ரூபாய் செலவு செய்து வீட்டிலேயே எல்லோருக்கும் பிடித்த மசாலா பொரி மிக்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம். 10 ரூபாய்க்கு பொரி வாங்கினாலே அனைவரும் சாப்பிடும் அளவுக்கு பொரி ரெடியாகி விடும். சுவையான மசாலா பொரி மிக்ஸ் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பொரி
வறுத்த வேர்க்கடலை
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலை
உப்பு
மிளகாய் தூள்
சாட் மசாலா தூள்
எலுமிச்சைபழச்சாறு
செய்முறை
ஒரு அகலமான கிண்ணத்தை எடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள் சேர்க்கவும்.
பொரி மிக்சர் | Pori Mixture Recipe In Tamil | Snacks Recipes | Street Style Mixture | Street Food
எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு முறை கலக்கவும். வறுத்த வேர்க்கடலையை சேர்த்து மீண்டும் கலக்கவும். இறுதியாக பொரியை சேர்த்து, அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அவ்வளவு தான் அனைத்து சுவையும் ஒன்றாக கலந்த மசாலா பொரி மிக்சர் தயார்.