தெருவோரங்களில் கிடைக்கும் சுவையான பானி பூரியை வீட்டில் எப்படி செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த ரெசிபியை பின்பற்றி மொறுமொறுப்பான பூரியும், காரசாரமான பானியும், சுவையான மசாலாவும் செய்யலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
ரவை - 200 கிராம் மைதா - 50 கிராம் உப்பு வெதுவெதுப்பான நீர் மாங்காய் துண்டுகள் பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி வேகவைத்த உருளைக்கிழங்கு வெண்ணெய் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் பானி பூரி மசாலா
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெதுவெதுப்பான நீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஈரத்துணியால் மூடி 20-25 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். ஊறிய மாவை மீண்டும் ஒருமுறை பிசைந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய வட்ட வடிவமாக தேய்க்கவும். தேய்த்த பூரிகளை ஒரு சுத்தமான பருத்தி துணியில் சிறிது நேரம் உலர விடவும். அடுப்பில் எண்ணெயை நன்றாக சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பூரிகளைப் போட்டு கரண்டியால் லேசாக அழுத்தவும். பூரிகள் உப்பி பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். அவ்வளவு டான் மொறுமொறுப்பான பூரிகள் தயார்.
மாங்காய் துண்டுகள், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து மென்மையான பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்கவும்.
பின்னர் இதில் தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் பானி பூரி மசாலா சேர்க்கவும். விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாக வெட்டிய மாங்காய் மற்றும் வெங்காயம் சேர்க்கலாம். அவ்வளவு தான் இப்போது பானி மற்றும் பூரி இரண்டும் தயாராகிவிட்டது.
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பானி பூரி மசாலா, உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக கலக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு வெண்ணெய் சேர்க்கலாம். பின்னர் பொரித்த பூரியின் நடுவில் ஒரு சிறிய துளை செய்து, தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை நிரப்பி பிறகு அதை காரசாரமான பானியில் நனைத்து உடனடியாக சாப்பிடலாம்.