வீட்டிலேயே சுவையான பானிபூரி எப்படி செய்வது என்று தி எவரிடே குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இது வீட்டிலேயே செய்வதால் சுவையாக மற்றும் சத்தாக இருக்கும். அதுவும் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் பானி மற்றும் மசாலா இருக்கும். பள்ளி சென்றுவரும் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி நல்ல சுவையில் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். குழந்தைகளுக்கு வேண்டும் என்றால் காரம் கொஞ்சம் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலை புதினா இலை பச்சை மிளகாய் இஞ்சி உப்பு எலுமிச்சம்பழச் சாறு பூந்தி உருளைக்கிழங்கு வெங்காயம் மிளகாய்த்தூள் சீரகத்தூள்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், பானிபூரி தண்ணி தயாரிக்க, ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கை கொத்தமல்லி இலை, ஒரு கை புதினா இலை, இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இந்த விழுதை வடிகட்டி, வடிகட்டிய பின் இரண்டு பெரிய டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். இதனுடன் அரை டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் சாட் மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் அரை எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். உங்களிடம் பூந்தி இருந்தால், ஒரு கைப்பிடி சேர்த்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக, பானிபூரி மசாலா தயாரிக்க, வேகவைத்து மசித்த மூன்று உருளைக்கிழங்குடன், ஒரு நறுக்கிய வெங்காயம், அரை பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் சாட் மசாலா, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு மற்றும் அரை எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கவும். நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பானி தண்ணியில் இருந்து ஒரு கரண்டி எடுத்து இதனுடன் சேர்த்து நன்கு பிசறவும்.
இப்போது உங்கள் பானிபூரி தயார். பூரியை உடைத்து, உள்ளே மசாலாவை வைத்து, சிறிது வெங்காயம் சேர்த்து, சுவையான பானி தண்ணியை ஊற்றி மகிழுங்கள். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரோட்டுகடை ஸ்டைல் பானிபூரி நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும்.