புரோட்டீன் அதிகம் உள்ள பன்னீரில் சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம். இதில் அவ்வளவு பயன்கள் உள்ளது. எடை இழப்பிற்கு உதவும். தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், இதை வைத்து பசங்களுக்கு ஹெல்தியான மற்றும் பார்த்ததுமே சாப்பிடற ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் பன்னீர் கபாப் எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
குடைமிளகாய்
வெங்காயம்
பன்னீர்
மிளகாய்தூள்
மிளகு
கொத்தமல்லி தூள்
உப்பு
எண்ணெய்
தயிர்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
செய்முறை
வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பன்னீர் மற்றும் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
Paneer kebab
இதை ஊற வைத்து ஒரு பல் குத்தும் குச்சியில் குடைமிளகாய் பன்னீர் வெங்காயம் என குத்திவிட்டு தோசை கல்லில் வைத்து திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் போதும் தோசை கல்லில் சுட்ட பன்னீர் கபாப் ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“