மழை நேரத்தில் ஈவ்னிங் டைம் டீ குடிக்கும்போது சாப்பிட ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் அதுவும் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிரெட்
தயிர்
உப்பு
ரவை
அரிசி மாவு
குக்கிங் சோடா
இஞ்சி
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
வெங்காயம்
செய்முறை
தேவையான அளவு பிரெட் எடுத்து அதன் சைடுகளை பிரித்து எடுத்து பின்னர் வெள்ளை பிரெட் பகுதிகளை துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதில் உப்பு, ரவை, அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் நசுக்கிய இஞ்சியையும் சேர்த்து நன்கு பிக்ஸிங் செய்து ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மெதுவடை மாதிரி தட்டி அதில் பொறித்து எடுத்தால் பிரட் ரவா வடை ரெடியாகி விடும்.
இதனை டீ, மோர் உடன் சேர்த்து சாப்பிடலாம். இதை சட்னி, சாம்பாரில் தொட்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“