விளையாடி வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான தேங்காய் பான் கேக் ஒரு சிறந்த சிற்றுண்டி. கோதுமை மாவு, முட்டை, தேங்காய் பால் மற்றும் தேன் போன்ற சத்தான பொருட்களைக் கொண்டு இதை எளிதாக செய்யலாம். இந்த பான் கேக் செய்வது மிகவும் எளிது, மேலும் இதன் மேல் தேன் அல்லது மேப்பிள் சிரப் சேர்த்து பரிமாறினால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதனை எப்படி வீட்டில் செய்யலாம் என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப் (250 மில்லி கப்) பிரவுன் சுகர் - 1/4 கப் உப்பு - 1 சிட்டிகை பேக்கிங் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் - 1/4 கப் முட்டை - 2 வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி கெட்டியான தேங்காய் பால் - 200 மில்லி தேன் - 2 டேபிள் ஸ்பூன் நீர் வெண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். பிறகு, மற்றொரு சிறிய பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனை மாவுடன் சேர்க்கவும்.
இதனுடன் வெண்ணிலா எசன்ஸ், தேங்காய் பால் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்க வேண்டும். தேவைப்பட்டால், மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கலாம். கலந்து வைத்த மாவை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
ஒரு தோசைக் கல்லை சூடாக்கி, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருக்க வேண்டும். ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக் கல்லில் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு ஒரு நிமிடம் வேக வைக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து, பான்கேக்கை திருப்பிப் போட்டு, மறுபக்கமும் சுமார் 30 விநாடிகள் வேக விட வேண்டும். பான்கேக் இருபுறமும் நன்கு வெந்ததும், அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கலாம். இதேபோல், அனைத்து மாவுக்கும் பான்கேக் தயார் செய்யலாம்.
இந்த பான்கேக்கின் மேல் சிறிது தேன், சிரப் அல்லது சாக்லேட் சாஸ் ஊற்றி சூடாக பரிமாறலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி தயார். பிள்ளைகள் இனிப்புதான் விரும்பி சாப்பிடுவார்கள் அப்படி இருப்பவர்களுக்கு இதை செய்து கொடுங்கள்.