வெறும் பத்து பொருட்களை வைத்து ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம். டீ குடிக்கும் போது இந்த ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.இது செய்வது குறித்து டீக்கடை கிச்சன் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
மஞ்சள் தூள் மிளகாய் தூள் பெருங்காயத்தூள் உப்பு சீரகம் ஓமம் கருவேப்பிலை எண்ணெய் கொத்தமல்லி தழை புதினா எள் அரிசி மாவு
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சீரகம், ஓமம், எண்ணெய், கருவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், புதினா ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் இதில் சிறிய கருப்பு எள் அல்லது வெள்ளை எள் சேர்த்து கலந்து கொதித்து வரும் போது அதில் அரிசி மாவை சேர்த்து கலந்து விடவும். கட்டியில்லாமல் அடுப்பில் இருந்து எடுத்து கிளறிக் கொண்டே இருக்கவும். சூடு ஆறியதும் இதை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கைகளில் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் இதை சப்பாத்தி மாவு திரட்டுவது போல திரட்டி உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் நறுக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி ஆகிவிடும்.