கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
தென்னிந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியான புனகுலுவை வீட்டிலேயே மிக எளிதாகத் தயாரிக்கும் முறை பற்றி மெட்ராஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
2 கப் தோசை மாவு (புளித்த மாவு சிறந்தது)
½ கப் மைதா
¼ கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
¼ கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் (விருப்பத்திற்கேற்ப)
1 டீஸ்பூன் சீரக விதைகள்
⅛ டீஸ்பூன் பேக்கிங் சோடா
தேவையான அளவு உப்பு
செய்முறை:
முதலில், ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் தோசை மாவை எடுக்கவும். பின்னர், அதனுடன் ½ கப் மைதா மாவைச் சேர்க்கவும். மைதா சேர்ப்பதால் புனுங்குலு மேலும் மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும் வரும். அடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை மாவுடன் சேர்க்கவும். ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்ப்பது காரமான சுவையை விரும்புகிறவர்களுக்கு ஏற்றது.
பிறகு, ஒரு டீஸ்பூன் சீரக விதைகளை மாவில் போடவும். சீரகம் புனுங்குலுவுக்கு நல்ல வாசனையையும், செரிமான சக்தியையும் கொடுக்கும். இறுதியாக, ⅛ டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து, தேவையான அளவு உப்பையும் போட்டுக்கொள்ளவும்.
இப்போது, அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, தோசை மாவின் ஈரப்பதமே போதுமானதாக இருக்கும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், தயாரித்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய உருண்டைகளாகவோ அல்லது கரண்டியால் சிறிய துளிகளாகவோ எண்ணெயில் போடவும்.
புனுங்குலுவை மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்கவும். அவ்வப்போது திருப்பி விடுவதன் மூலம் எல்லா பக்கமும் சமமாக வேகும். பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
சுவையான, மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற புனுங்குலு இப்போது தயாராக உள்ளது. இதை தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.