ஈவினிங் ஸ்நாக்ஸ்: மொறு மொறுன்னு சாம்பார் போண்டா... டீ கடை ஸ்டைலில் இப்படி செய்து குடுங்க!

ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு டீக்கடை ஸ்டைலில் மொறுமொறுன்னு சாம்பார் போண்டா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு டீக்கடை ஸ்டைலில் மொறுமொறுன்னு சாம்பார் போண்டா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
bonda bonda

குற்றாலம், தென்காசி பகுதிகளில் மழை நேரங்களில் பிரபலமான டீக்கடை ஸ்டைல் சாம்பார் போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த ரெசிபி, மழை சொட்ட சொட்ட பெய்யும்போது சூடாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதனை எப்படி செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.  

Advertisment

தேவையான பொருட்கள்:

பீன்ஸ்
உருளைக்கிழங்கு
பீட்ரூட்
கேரட்
முட்டைகோஸ்
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
மீடியம் சைஸ் பல்லாரி 
பெருஞ்சீரகம்
சின்ன சீரகம்
பெருங்காயத்தூள்
சாம்பார் பொடி
தூள் உப்பு
மல்லி இலை
கருவேப்பிலை
கடலை மாவு
மைதா மாவு
அரிசி மாவு
காஷ்மீர் சில்லி பவுடர்
சோடா உப்பு
எண்ணெய்

செய்முறை:
 
முதலில், சாம்பார் போண்டாவுக்கான காய்கறிகள் அனைத்தையும் (பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முட்டைகோஸ்) நன்றாகத் துருவி அல்லது பொடியாக நறுக்கித் தயாராக வைத்துக் கொள்ளவும்.

Advertisment
Advertisements

ஒரு பெரிய பாத்திரத்தில் இந்த காய்கறிகளுடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி (நசுக்கியது), பூண்டு (நசுக்கியது), பொடியாக நறுக்கிய பல்லாரி, பெருஞ்சீரகம், சின்ன சீரகம், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி, தூள் உப்பு, மல்லி இலை, கருவேப்பிலை ஆகிய அனைத்தையும் சேர்க்கவும்.

இந்தக் கலவையை நன்றாகப் பிசைந்து, அனைத்து மசாலாக்களும் காய்கறிகளுடன் சேரும்படி பார்த்துக் கொள்ளவும். பிசைந்த காய்கறி கலவையை ஒரு 10 நிமிடம் மூடி போட்டு ஊறவிடவும். (உப்பு சேர்த்தவுடன் காய்கறிகள் சற்று சுருங்கி வரும்).

ஒரு தனி பாத்திரத்தில், கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, தூள் உப்பு, காஷ்மீர் சில்லி பவுடர், சோடா உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலந்த மாவுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, எண்ணெய் மாவு முழுவதும் பரவும்படி நசுக்கிப் பிசையவும். இவ்வாறு செய்வதால் போண்டா மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும் வரும்.

ஊறவைத்த காய்கறி கலவையை ஒருமுறை நன்றாகக் கிளறி விடவும். இப்போது, கலந்து வைத்துள்ள மாவை, காய்கறி கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துப் பிசையவும். மாவும் காய்கறிகளும் நன்கு கலந்து போண்டா மாவு பதத்திற்கு வரும் வரை பிசைந்து கொள்ளவும்.

பின்னர் இந்த மாவை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும். 

Healthy light weight snacks to eat in this season Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: