வீட்டில் எளிதாகவும், சுவையாகவும் செய்யக்கூடிய ஒரு பாரம்பரிய இனிப்புப் பண்டம்தான் சுழியம். பண்டிகைக் காலங்களிலும், விசேஷ நாட்களிலும் சுழியம் செய்வது வழக்கம் தான் ஆனால் சுவையான சுழியம் தினமும் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மாதிரி செய்வதற்கு ஃபூடிஸ்ரூஃப் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு மஞ்சள் தூள் நெய் தேங்காய் வெல்லம் ஏலக்காய் தூள் பச்சரிசி உளுந்து உப்பு
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு குக்கரில் கடலைப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைக்கவும். வெந்த பருப்பை எடுத்து, நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் நெய், துருவிய தேங்காய், மற்றும் வெல்லம் சேர்த்து, வெல்லம் கரையும் வரை சூடாக்கவும்.
இந்த வெல்லப்பாகுடன் மசித்த கடலைப்பருப்பை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக, ஏலக்காய் தூள் சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். பச்சரிசி மற்றும் உளுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசி மற்றும் உளுந்தை எடுத்து, நன்றாக அரைத்து மென்மையான மாவாகத் தயார் செய்யவும். அரைத்த மாவுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள பூரணக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒவ்வொரு பூரண உருண்டையையும், தயார் செய்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து பொறிக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மாவில் முக்கிய உருண்டைகளை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் எண்ணெயில் பொறித்த சுவையான சுழியம் தயார்.