தேவையான பொருட்கள்
பீன்ஸ்
கேரட்
உருளைக்கிழங்கு
காலிபிளவர்
கடுகு
சீரகம்
உளுந்து
முந்திரிபருப்பு
பூண்டு
பச்சை பட்டாணி
வெங்காயம்
தக்காளி
மஞ்சள் தூள்
கரம் மசாலா
மிளகாய் தூள்
உப்பு
பெருங்காயம்
கடலை மாவு
அரிசி மாவு
ஓமம்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்து சேர்த்து தாளித்து அதில் முந்திரிப் பருப்பு, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, காலிபிளவர் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர் வேகவைத்த பச்சை பட்டாணியை அதனுடன் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து மேஷ் செய்யவும். பின்னர் அதை ஒரு தட்டில் மாற்றி வைத்துவிட்டு அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
Vegetable Omelette | Evening time snacks | Durga lunch home special dish | Chef Venkatesh Bhat
அதனுடன் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து கலந்து அதில் தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் நீங்கும் வரை வேக வைக்கவும்.
அதில் வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து மேஷ் செய்யவும். பின்னர் இதில் தாளித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறவும். சிறிது கொத்தமல்லி தலைகளையும் அதில் சேர்த்து கிளறவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். பின்னர் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். இதில் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள காய்கறி மசாலாவை உருண்டை ஆக பிடித்து பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“