ஆம்லெட் என்றாலே அது முட்டையில் செய்வது தான். பெரும்பாலானோருக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். காலை, மதியம், இரவு என எந்தநேரமும் உணவுக்கு சைடிஷ்ஷாக வைத்து சாப்பிடுவோம். தினமும் முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அதேவேளையில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் முட்டை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு ஏற்றது போல் வெஜ் ஆம்லெட் உள்ளது. ஆம்லெட் என்றால் முட்டையில் செய்வது மட்டும் என்று நினைத்துவந்தோம், ஆனால் இங்கு முட்டை சேர்க்காத வெஜ் ஆம்லெட் ரெசியியும் உள்ளது. வட இந்தியாவில் ஃபேமஸ் ஆக உள்ளது. சைடிஷ்ஷாக அல்லாமல் காலை, இரவு நேர உணவாக வெஜ் ஆம்லெட் ரெசிபியை சாப்பிடுகிறார்கள்.
பாசிப்பருப்பில் செய்யக்கூடிய இந்த உணவு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவாக உள்ளது எனக் கூறுகின்றனர். அந்தவகையில் வெஜ் ஆம்லெட் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மஞ்சள் பாசிப்பருப்பு தோல் நீக்கியது - 1 1/2 கப்
- பச்சை மிளகாய் - 5
- உப்பு - தேவையான அளவு
- வெங்காயம் - 2
- கேரட் துருவல் - 1
- கொத்தமல்லி - கொஞ்சம்
- குடை மிளகாய் - 1/2
- சோடா உப்பு - தேவையான அளவு
- மிளகு சீரகம் - தேவையான அளவு
- பெருங்காய தூள் - கொஞ்சம்
- இஞ்சி விழுது - கொஞ்சம்
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸியில் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்த்து அடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடை மிளகாய், துருவிய கேரட், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து, சேட் மசாலா தூள் அல்லது மிளகு சீரகம், சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தோசை சுடுவது போல் மாவு பதத்திற்கு வந்துவிடும்.
இப்போது, பான் (Pan) வைத்து தோசை சுடுவது போல் கொஞ்சம் மொத்தமாக பாசிப்பருப்பு கலவையை ஊற்றி, எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கலாம். மீடியம் பிளேம் தீயில் வைத்து தோசை போல் சுட்டு எடுக்கலாம். அவ்வளவு தான், தேங்காய் சட்னி, சாஸ் வைத்து சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“