நமது உணவு முறை நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும். இந்நிலையில் இந்த உணவு வகைகளில் முக்கிய சத்துக்கள் இருக்கிறது. இந்நிலையில் இந்த உணவுகள் ரத்த அழுத்த அளவை குறைக்க உதவும்.
கீரையில் பொட்டாஷியம் இருக்கிறது. பொட்டாஷியம் உடலில் உள்ள அதிக சோடியத்தை வெளியேற்றுவதால், ரத்த அழுத்தம் குறைகிறது.
பீட்ரூடில் நைட்ரேட்ஸ் இருப்பதால், இவை ரத்த குழாய்களை நீதானப்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறையும்.
வாழைப்பழத்தில் பொட்டாஷியம் இருக்கிறது. இந்த பொட்டாஷியம் ரத்த குழாய்களை நிதானப்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
பூண்டு சாப்பிட்டல், ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் அது நல்லது.
பிளாக்ஸ் விதைகளில் ஒமேகா 3 உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக இதன் வீக்கத்தை குறைக்கும் குணம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது ரத்த குழாய்களை விரிவடைய உதவும்.
இந்நிலையில் கரையும் நார்சத்து இருப்பதால், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
ராஜ்கிரா அல்லது அமரந்த் அல்லது தண்டுக் கீரை விதைகள் என்றும் இது அழைக்கப்படுகிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் சோடியத்தால் ஏற்படும் விளைவுகளை சீராக்கி ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் உள்ள பையோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ்-ஆன பெப்டைட்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ரத்த அழுத்தம் அதிகரிக்காத தன்மை கொண்டது.
யோகர்ட் அல்லது தயிரில் கால்சியம் உள்ளது. மேலும் இதில் இருக்கும் பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“