வீட்டில் மீதமான சப்பாத்தி மாவை இனி தூக்கிப்போடாதீர்கள். அதை வைத்து ஈஸியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம். மீதமான சப்பாத்தி மாவில் ஸ்நாக்ஸ் செய்வது பற்றி எனக்கு பிடித்த சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியதாவது,
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி மாவு
உப்பு
எண்ணெய்
கடுகு
வெங்காயம்
மிளகாய்தூள்
சீரகத்தூள்
கரம் மசாலா
மஞ்சள் தூள்
கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும்.
பின்னர் மீதமான சப்பாத்தி மாவை வட்டமாக திரட்டி உள்ளே இந்த வதக்கிய வெங்காயத்தை வைத்து இட்லி பாத்திரத்தில் சிறிது நேரம் வேக வைக்கவும்.
சப்பாத்தி மாவு மீதம் ஆயிருச்சா இப்ப இந்த வீடியோ உங்களுக்கு தான்
பின்னர் அதை எடுத்து எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அதற்கு தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி மேலே இந்த சப்பாத்தி ஸ்நாக்கை வைத்து இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கலாம். இதற்கு தக்காளி சாஸ் அல்லது அனைத்து வகையான சட்னியும் சுவையாக இருக்கும்.