கண்பார்வை மங்கலான மாதிரி இருப்பவர்கள் தொடர்ந்து ஏழு உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். கண்பார்வை தெளிவாக தெரியும் குணப்படுத்தப்படும். வராமல் தடுக்கவும் உதவும்.
கண்களிலிருந்து நீர் வடிதல், நாள்பட்ட தலைவலி இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி கண் சம்பந்தமான பிரச்சனைகளை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வேண்டும். சரி செய்யவில்லை என்றால் நாளடைவில் கண் பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.
எனவே கண் பார்வை அதிகரிக்கவும் கண்களுக்கு ஊட்டச்சத்துக் கொடுக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு, மரபு வழி, வயது மூப்பு காரணங்கள் கண்பார்வை கோளாறுகள் ஏற்படுகின்றது.
போன் கம்ப்யூட்டர் வேலை போன்ற காரணங்களாலும் கண் பாதிக்கப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் இருந்து நம் கண்களை பாதுகாக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
பாதாம்: கண்பார்வை தெளிவாக பாதாம் பயன்படுகிறது.வைட்டமின் ஈ இதில் அதிகமாக உள்ளதால் இது கண்கள் சரி செய்து கண் பார்வை தெளிவாகும். இரும்புச்சத்து, புரதச்சத்து சத்துக்கள் கிடைக்கும். கண்ணிற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மக்னீசியம் பாதாமில் உள்ளதால் கண் வலி குறையும். அதற்கு முன் பத்திலிருந்து பன்னிரண்டு பாதாம் எடுத்து நீரில் ஊற வைத்து காலை தோல் நீக்கி விட்டு அதை சாப்பிட்டு வர கண்பார்வை மேம்படும்.
கேரட்: கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ஆரோக்கியமான கண் பார்வைக்கு அதிகம் உதவும். இதை ஜூஸாகவும் பச்சை காய்கறியாகவும் சாப்பிடலாம். கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது தினமும் காலையில் கேரட் சாப்பிடுவது அவசியம்.
பச்சை இலை காய்கறிகள்: கண்பார்வை ஏற்பட பச்சை இலை காய்கறிகள் வைட்டமின் ஏ, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கும். கண் சிதைவை தடுக்கவும் பச்சை காய்கறிகள் உதவும். தொடர்ந்து பச்சை பயிர்களை சாப்பிட்டு வர கண்பார்வை மேம்படுவதை பார்க்கலாம்.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது கண்களில் உள்ள ரத்த ஓட்டத்தையும் ரத்த நாளங்களையும் ஊக்கப்படுத்தும். கண் பார்வை தெளிவாகும் தினசரி உணவில் சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்வதிலும் கண்பார்வை தெளிவுபடும் மேலும் இனி வராமலும் தடுக்கும்.
கண் பார்வை அதிகரிக்க இந்த பழம் போதும்! |Eye Power Increase Health Benefits in Tamil| Eye Health tips
முழு தானியங்கள்: சமைத்து சாப்பிடலாம் தினசரி முழு தானியங்களை எடுத்துக் கொள்வது அவசியம். இப்படி சாப்பிடுவதன் மூலம் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணப்படுத்தப்படும் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது சரியாகும்.
மீன்: மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட உதவுகிறது. மீன் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் தொடர்ந்து வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது மீள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முட்டை: முட்டையில் உள்ள புரதம் கண் கீழ் உள்ள சுருக்கத்தையும் போக்கும் கண்ணுக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.
இந்த உணவுகள் கூடவே தங்களுக்கு ஓய்வு பயிற்சிகளும் அவசியம். இரவு 10 மணிக்கு முன்னதாகவே நம் போன் கணினிகளை அணைத்துவிட்டு தூங்க ஆரம்பித்து விட வேண்டும். சிறிது சிறிதாக கண் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“