உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் இன்றைய சூழலில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வருந்தக் கூடிய விஷயம் என்னவென்றால், வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்காக தினமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.
அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவுகளுடன் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்றை பற்றி ஹெல்த் பாஸ்கெட் யூடியூப் பக்கத்தில் கூறியதாவது,
கறிவேப்பிலை குறித்து இன்றைய தாவரவியல் விஞ்ஞானத்தை ஆராய்ந்து பார்த்தால், பவ்லேறு நோய்களை அவை தடுப்பதாக அறியப்படுகிறது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Is curry leaves can help regulate blood sugar? | Dr.G.Sivaraman | Health Basket Health Tips
இன்று பலரை அச்சுறுத்தி வரும் சர்க்கரை நோயை தடுப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மூலிகை மருந்துகளில் கூட அதிகமாக கறிவேப்பிலை சேர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணை நோயாக இரத்த கொழுப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. கறிவேப்பிலை கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிப்பதால் இதனை மருந்தாக பயன்படுத்தலாம் என சிவராமன் கூறுகிறார்.
தினசரி கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டால், சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும். ஆனால், நாம் ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் மருந்துகளை ஒரு போதும் கைவிட்டுவிடக் கூடாது.
கறிவேப்பிலையில் இரும்புச் சத்தும் உள்ளது. இவற்றை தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கறிவேப்பிலையை பயன்படுத்தும் போது அவை ஃப்ரெஷ்ஷாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். அப்போது மட்டுமே அவற்றின் முழுமையான சத்துகளை பெற முடியும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.