இந்திய உணவு வகைகளில் ஆரோக்கியத்திற்கும், சுவைக்கும் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக, கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அப்படியான ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவாக பாலக் தால் சாதமும், அதற்கு ஏற்ற மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வறுவலும் எப்படி செய்வது என்று ரேகாஸ்குசினா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
இந்த பாலக்கீரை பருப்பு சாதம் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும். காரத்தை தவிர்த்து கொள்ளலாம். சிம்பிள் ஒன்பாட் ரெசிபி அதிக நேரம் வேலை இழுக்காது.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு
பாலக் கீரை
சின்ன வெங்காயம்
தக்காளி
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
தனியா தூள்
கரம் மசாலா
சீரகம்
கடுகு
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
நெய் / எண்ணெய்
உப்பு
உருளைக்கிழங்கு
சீரகத்தூள்
சோம்பு
செய்முறை:
அரிசி மற்றும் துவரம் பருப்பை ஒன்றாக நன்கு கழுவி, சுமார் 20-30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பாலக் கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
ஒரு குக்கரில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடாக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து, கீரை சுருங்கும் வரை வதக்கவும்.
ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் 3-4 கப் தண்ணீர் சேர்த்து (சாதத்தின் பதம் தேவைப்பட்டால் தண்ணீரை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்) ஒரு முறை கிளறி விடவும்.
குக்கரை மூடி, 2-3 விசில் வரும் வரை அல்லது அரிசி மற்றும் பருப்பு நன்கு வேகும் வரை சமைக்கவும். பிரஷர் அடங்கியதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறி விடவும். சுவையான பாலக் தால் சாதம் தயார்.
உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிய, மெல்லிய துண்டுகளாக (விரும்பிய வடிவில்) நறுக்கிக்கொள்ளவும். வெட்டிய உருளைக்கிழங்கை தண்ணீரில் கழுவி விட்டு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு உருளைக்கிழங்கு போட்டு வேகவிடவும்.
பின்னர் வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு வேகவிட்டு எடுத்தால் உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.