பாரம்பரிய உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் உலகம் முழுவதும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மருத்துவர் சிவராமன்.
மருத்துவ சிவராமன் நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை, மருத்துவ குணங்களை அறிவியல் மொழியில் பேசியது மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
வெந்தயம் நம்முடைய உணவுகளிலும், சித்த மருத்துவத்திலும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. உடல் குளிர்ச்சிக்காக பலரும் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். உண்மையில் வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
ஹீட்டான உடம்பு, உடல் சூடாக இருந்தது என்றால் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்துக் கொள்ளலாம். உடல் சூடு இல்லை, கொழுப்பை குறைக்க வேண்டும், ரத்தத்தில் கொழுப்பு சேரக்கூடாது என்றால் வெந்தயத்தை அப்படியே நேரடியாக பொடி செய்து சாப்பிடுவது தான் நல்லது” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
“வெந்தயத்தை நேரடியாக பொடி செய்து சாப்பிடுவதில் சில பேருக்கு வாயில் கசப்பும் குமட்டலும் வரும். வெந்தயத்தை அப்படியே சவைத்து சாப்பிடும்போது, வாயில் ஒரு வழவழத் தன்மை வரும். அது ஒரு வெகுட்டலை உண்டாக்கும் என்பதற்காக நிறைய பேர் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடும் ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால், உடலில் குளிர்ச்சி வேண்டும் என்பவர்கள் ஊற வைத்து சாப்பிடலாம். உடல் ரொம்ப சூடாக இருக்கிறது வெள்ளை படுகிறது, பித்த உடம்பு, உடல் ரொம்ப மெலிந்து இருக்கிறது. இப்படி இருப்பவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி, இயல்பாக இருப்பவர்கள் வெந்தயத்தை அப்படியே பொடி செய்து சாப்பிடலாம்” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“