ஒரு பெண்ணின் வாழ்வில் மாதா மாதம் ஏற்படும் மாதவிடாய் நின்றுபோகும் நிலையே மெனோபாஸ். இது உடலில் நிகழும் மிகவும் இயற்கையான ஒரு நிகழ்வு. வயதாகும் போது, பெண்களின் சினைப்பையில் உள்ள கருமுட்டை தீர்ந்துவிடும். இதனால் மாதவிடாய் ஏற்படுவதும் நின்றுவிடுகிறது. 45 வயதிலிருந்து 54 வயது வரை எப்போது வேண்டுமானால் மெனோபாஸ் வரலாம்.
Advertisment
பலருக்கு இது அசௌகரியம், பதட்டம், தூக்கமின்மை, மனநிலை மாற்றங்கள், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்னைகளை தருகிறது. இந்த அறிகுறிகளை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அவற்றை எளிதாக்கும்.
மெனோபாஸ் காலத்தில் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகளில் ராகியும் ஒன்று. ராகியில் கால்சியம், புரோட்டீன்கள், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இங்கு ராகி தோசை எப்படி செய்வது என்பதை பாருங்கள்..
தேவையான பொருட்கள்
2 டேபிள்ஸ்பூன் ராகி
1 டேபிள்ஸ்பூன் உளுந்து, குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும்
பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, குடமிளகாய், கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய்
உப்பு சுவைக்கேற்ப
செய்முறை
உளுந்தை நன்கு கழுவி, அரைத்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். இந்த மாவுடன் ராகி மாவு சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இதை குறைந்த பட்சம் 7-8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.
காலையில் மாவில் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தவாவை சூடாக்கி அதன் மீது மாவை ஊற்றவும். நறுக்கிய காய்கறிகளைப் போட்டு இருபுறமும் வேக வைக்கவும். கொத்தமல்லி மற்றும் புதினா சட்னியுடன் பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“