/indian-express-tamil/media/media_files/2025/05/12/dVJ2KpoTx9ijqxXgSDf6.jpg)
கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படியாக சம்மர் ஸ்பெஷலாக ஃபெட்டுசினி ஆல்ஃபிரடோ பாஸ்தா எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஃபெட்டுசினி பாஸ்தா - 300 கிராம்
உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம்
பூண்டு - 2 மேசைக்கரண்டி நறுக்கியது
ஃபிரெஷ் கிரீம் - 1 கப்
பார்மேசான் சீஸ் - 100 கிராம்
பாஸ்தா வேகவைத்த தண்ணீர்
உப்பு
மிளகு
பார்ஸ்லே
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு மற்றும் ஃபெட்டுசினி பாஸ்தாவை சேர்த்து முக்கால் பாகம் வேகவைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி, வடிகட்டிய தண்ணீரை எடுத்து வைக்கவும். ஒரு பானில் உப்பில்லாத வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் நறுக்கிய பூண்டு சேர்த்து வறுக்கவும்.
அடுத்து ஃபிரெஷ் கிரீம் சேர்த்து கலந்து விடவும். பிறகு பார்மேசான் சீஸ் சேர்த்து கலந்து விடவும். பாஸ்தா வேகவைத்த தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். சிறிது உப்பு, மிளகு சேர்த்து கலந்து விடவும். சாஸ் தயாரானவுடன் வேகவைத்த ஃபெட்டுசினி பாஸ்தாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பார்மேசான் சீஸ் மற்றும் பார்ஸ்லேவை மேலே தூவி கலந்து விடவும். அவ்வளவு தான் அருமையான ஃபெட்டுசினி ஆல்ஃபிரடோ பாஸ்தா தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.