ஃபில்டர் இல்லாமல் சுவையான காபி... சிம்பிள் ஸ்டெப்ஸ் இதுதான்!
பலரும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுடசுட பில்டர் காபி குடித்தால் மட்டுமே ஒரு வித நிம்மதி அடடைகிறார்கள். பில்டர் காபியின் நறுமணம், சுவை எந்தவொரு இன்ஸ்டன்ட் காபி பவுடரிலும் கிடைக்காது.
உலகின் மிகவும் பிரபலமான காபிகளுள் ஒன்றாக பில்டர் காபி வலம் வருகிறது. சர்வதேச அளவில் வெளியான பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது பில்டர் காபி. இவற்றுக்கு என தமிழ்நாட்டில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
Advertisment
பலரும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுடசுட பில்டர் காபி குடித்தால் மட்டுமே ஒரு வித நிம்மதி அடடைகிறார்கள். பில்டர் காபியின் நறுமணம், சுவை எந்தவொரு இன்ஸ்டன்ட் காபி பவுடரிலும் கிடைக்காது. இவற்றை நாம் நம்முடைய வீட்டிலே எளிதில் தயார் செய்து விடலாம். அந்த வகையில், பில்டர் காபி மெஷின் என எதுவும் இல்லாமல் எப்படி ரெடி செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
பில்டர் காபி - நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து, அதில் 5 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் சேர்க்கவும். பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
Advertisment
Advertisement
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/4 அளவு டம்பளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்த தண்ணீரை காபி பவுடருடன் சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து கலந்து விடவும்.
பின்னர் வெறும் தண்ணீரை அதன் கொஞ்சமாக தெளித்து விடவும். பிறகு ஒரு தட்டு வைத்து மூடி விடவும். ஆறிய பின்னர் வடிகட்டியால் மேலாக வடித்து எடுத்தல் பில்டர் காபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“