/indian-express-tamil/media/media_files/2025/08/16/istockphoto-1589593378-612x612-1-2025-08-16-22-43-52.jpg)
காஃபி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு உற்சாக பானம். உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 2.25 பில்லியன் பேர் காஃபி குடிப்பதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
நீரிழிவு, இதய நோய். அழற்சி குடல் நோய், கல்லீரல் நோய் போன்ற நிலைமைகளுக்கு காஃபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளன. சில ஆய்வுகளில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
காஃபியில் ரிஃபோஃப்ளேவின் (வைட்டமின் பி2) நியாசின் (வைட்டமின் பி3) மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பல்வேறு பினாலிக் கலவைகள் உள்ளன. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்றங்கள் உட்பட பல பயனுள்ள ஊட்டச்சத்துக்களும் உள்ளன. காஃபியில் உள்ள பிற பொருள்கள் பல்வேறு நன்மைகளை அளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தினசரி 2 கப் காஃபி குடிப்பது டைப்2 நீரிழிவு மற்றும் மனச்சோர்வு அபாயத்தை குறைக்கலாம். எடையை கட்டுப்படுத்தலாம். நீண்ட ஆயுள் காலத்தை அளிக்கலாம். இந்த காஃபி உடலுக்கு அளிக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
காஃபியில் இருக்கும் காஃபின் ஆனது மைய நரம்பு மண்டல தூண்டுதல் ஆகும். இது சோர்வை எதிர்த்து போராடவும் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
காஃபின் அடினோசின் எனப்படும் நரம்பியகடத்தியின் ஏற்பிகளை தடுக்கிறது. மூளையில் உள்ள மற்ற நரம்பியக்கடத்திகளின் அளவை அதிகரிக்கிறது. டோபமைன் அளவும் அதிகரிக்கிறது.
சிறிய ஆய்வு ஒன்றில் காஃபின் உட்கொள்வது சைக்கிள் ஓட்டும் பயிற்சியின் போது சோர்வடையும் நேரத்தை 12% வரை அதிகரித்தது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களின் அகநிலை அளவை கணிசமாக குறைத்தது.
மற்றொரு ஆய்வில் கோல்ஃப் சுற்றுக்கு முன்னும் பின்னும் காஃபின் உட்கொள்வது செயல்திறன் மேம்பட்டது கண்டறியப்பட்டது. சோர்வு உணர்வுகளை குறைத்தது கண்டறியப்பட்டது.
இப்போது இந்த பில்டர் காபியை பில்டெரே இல்லாமல் எப்படி வீட்டிலேயே போடுவது என்று பார்க்கலாம்.
ஃபில்டர் இல்லாமல் வீட்டிலேயே சுவையான ஃபில்டர் காபி தயாரிக்க மிகவும் எளிது. முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு மேசைக் கரண்டி காபி பொடியைச் சேர்க்க வேண்டும். அதை நன்றாகக் கலக்கி, அடுப்பை சிம்மாக வைத்து சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும்.
பின்னர் அதை ஒரு நைலான் சாஃப், ஸ்டெயினர் அல்லது சுத்தமான துணியின் மூலம் வடிக்க வேண்டும். இப்போது ஒரு வேறு பாத்திரத்தில் ஒரு கப் பாலை நன்கு காய்ச்சி, அதில் தேவையான அளவு சக்கரை சேர்த்து கலக்க வேண்டும். அதன் பிறகு, வடித்த காபி எஸென்ஸை பாலைல சேர்த்து நன்றாக கலைத்தால், சுடச்சுட சுவையான ஃபில்டர் காபி ரெடியாயிடும்.
இந்த முறையில், ஃபில்டர் இல்லாமல் இருந்தாலும், வீட்டிலேயே உண்மையான ஃபில்டர் காபி சுவையை அனுபவிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.