பழங்களில் சிட்ரஸ் பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இந்நிலையில் இதய ஆரோக்கியத்திற்கு, கல்லீரல் செயல்பாடுகளை ஊக்கப்படுத்த மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த ஒரு பழம் உதவி செய்கிறது. ’பொமலோ’ அல்லது பம்பளிமாஸ் பழம் என்று இதை அழைப்பார்கள்.
இந்த பழத்தால் ஏற்படும் ஆரோக்கியமான நன்மைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடண்ட் போல் செயல்பட்டு மனித செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. இதில் இருக்கும் அஸ்கார்பிக் ஆசிட், உடலில் உள்ள வெள்ளை அணுக்களை கூடுதலாக தூண்டி, நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
இதில் இருக்கும் அதிகமான பொட்டாஷியம், உடலின் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது. இதய தசைகளின் செயல்பாட்டை அதிகமாக்குகிறது. மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறிக்கிறது.
இந்நிலையில் இதில் இருக்கும் நரின்ஜினின் மற்றும் நரின்ஜின் கல்லீரலுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. இதனால் கல்லீரல் செயலிழப்பிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்து வயதாவதை தடுக்கும். நமது சருமம் சேதமடைவதை தடுத்து, இளமையான தோற்றம் தரும்.
இதில் இருக்கும் அதிக நார்சத்து, வைட்ட சி இருப்பதால் உடல் எடை குறையும் மேலும் கொலஸ்ட்ரால் அளவு குறையும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil