ஒரு முறை இப்படி ப்ரைட் ரைஸ் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் 2
அரை முட்டை கோஸ்
4 கேரட்
மிளகு தூள் – 1 ½ ஸ்பூன்
பூண்டு – 4
பச்சை மிளகாய் – 3
அஜினோமோடோ- 1 சிட்டிகை
குடைமிளகாய் – 1
சோயா சாஸ்- 1 டீஸ்பூன்
காலிப்பிளவர் – ¼ கப்
தக்களி சாஸ் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – அரை கப்
உப்பு தேவையான அளவு
பட்டர் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பட்டை 1
செய்முறை: முதலில் அரிசியை வேகவைத்து உதரி உதரியாக வடித்து கொள்ளவும். எண்ணெய், பட்டர் காயவைத்து அதில் பட்டை, கிராம்பு இட்டு வெடித்ததும் பூண்டு சேர்க்கவும். அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு குடைமிளகாயை வதக்கி எடுத்து கொள்ளவும்.
காலிப்பிளவர், முட்டை கோஸ், எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். அஜினோமோடோ சேர்க்கவும். தொடர்ந்து காய்கறிகள் நன்றாக வதக்க வேண்டும். குடைமிளகாய் மாறும் காய்கறிகளின் தண்ணீர் வற்றியதும். தக்காளி சாஸ், சோயா சாஸ், சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். பிறகு வேகவைத்த சாதம், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி இலையை போட்டு நன்கு கிளற வேண்டும்.