இந்த அடுப்பில்லாத இனிப்பு எப்படி சுவையாகவும் ஒரு வாரம் வைத்து சாப்பிடும் அளவிற்கு ஒரு இனிப்பு எப்படி செய்வது என்று பார்ப்போம். நெருப்பில்லாத ஸ்வீட்ஸ் எப்படி செய்வது என்று ஒய்2 சமையல் யூடியூப் பகக்த்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 3/4 கப் பழுப்பு சர்க்கரை - 1/2 கப் பொட்டுக்கடலை - 1/4 கப் உலர் திராட்சை - 1/4 கப் துருவிய தேங்காய் - 1 கப்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், 3/4 கப் வேர்க்கடலை, 1/2 கப் பழுப்பு சர்க்கரை, 1/4 கப் பொட்டுக்கடலை மற்றும் 1/4 கப் உலர் திராட்சை ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
அரைத்த பொடியை ஒரு கலக்கும் பாத்திரத்திற்கு மாற்றவும். இதனுடன் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த கலவையை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
சுவையான, அடுப்பில்லாத இனிப்பு இப்போது தயார். இந்த இனிப்பை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அறை வெப்பநிலையில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு சேமிக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.