அபுதாபியில் முதல் பரிசு அடித்த இந்த டிஷ்... நம்ம ஊரு ஸ்டைலில் இப்படி செஞ்சு பாருங்க; செம்ம டேஸ்ட்!

அபுதாபில் நடந்த உணவுத்திருவிழாவில் முதல் பரிசு அடித்த ஃப்ரூட் கஸ்டர்டு சுவையாகவும் ஹெல்தியாகவும் வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

அபுதாபில் நடந்த உணவுத்திருவிழாவில் முதல் பரிசு அடித்த ஃப்ரூட் கஸ்டர்டு சுவையாகவும் ஹெல்தியாகவும் வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
fruit custard

அபுதாபியில் நடந்த ஹெல்தியான உணவுத் திருவிழா என்ற போட்டியில் முதல் பரிசு அடித்த ஃப்ரூட் கஸ்டர்டு எப்படி செய்வது என்று திண்டுக்கல் டிவைன் குசைன் யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

கஸ்டட் பவுடரே பயன்படுத்தாமல் கிரீமியாக சுவையாக செய்த ஃப்ரூட் கஸ்டர்டு என்பதுதான் இதன் ஸ்பெஷல் ஆகும். 

தேவையான பொருட்கள்

மக்கான
பாதாம்
முந்திரி
வாழைப்பழம்
பால்
மாதுளை
ஆப்பிள்
திராட்சை 
ஏலக்காய் பொடி அல்லது வெண்ணிலா எசன்ஸ்
குங்குமப்பூ 

Advertisment
Advertisements

செய்முறை

முதலில் மகனா என்கிற தாமரை விதை, ஊறவைத்து தோல் உறித்த பாதாம், ஊறவைக்க முந்திரி, வாழைப்பழம், சுடு பால், குங்குமப்பூ ஆகியவற்றை ஊறவைக்கவும். பின்னர் மாதுளை பழம், ஆப்பிள், திராட்சை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 

இப்போது ஊற வைத்த அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் அனைத்து பழங்களையும் சேர்த்து அதில் அரைத்து வைத்ததை சேர்த்து கொள்ளவும். சிட்ரஸ் பழங்களை தவிர்த்து விடவும். 

இவை அனைத்தும் ஒன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான திக்கான ஃப்ரூட் கஸ்டர்டு ரெடியாகிவிடும். 

குங்குமப்பூ மற்றும் வெண்ணிலா எசன்ஸ் இல்லாதவர்கள் ஏலக்காய் பொடி பயன்படுத்திக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு இதில் தேன் சேர்த்துக் கொடுக்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்புக்கு தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்கலாம். 

Benefits of fruit juices this summer Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: